தவ்ஹீத் ஜமாஅத் video's: ஆது சமுதாயமும் நபி ஹுத் (அலை) அவர்களின் வரலாறும் அறிந்து கொள்ளுவோம்

ஆது சமுதாயமும் நபி ஹுத் (அலை) அவர்களின் வரலாறும் அறிந்து கொள்ளுவோம்

 இஸ்லாத்தில் ஆது சமுதாயமும் & நபி ஹுத் (அலை) அவர்களின் வரலாறும் அறிந்து கொள்ளுவோம் 💞 

• அல்லாஹ் தனது வேதம் அல்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாற்றை நமது படிப்பினைக்காக கூறி உள்ளான்! ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் வரலாற்றை அறிந்து வைத்து இருப்பது அவசியமாகும்!

இறைத்தூதர்களான அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது! 

(அல் குர்ஆன் : 12 : 111)

நபி நூஹ் (அலை) அவர்களுக்கு பிறகு அல்குர்ஆன் கூறும் இறைத்தூதர் ஹூத் (அலை) ஆவார்கள்! இவர்களின் சமுதாய மக்கள் தான் ‘ ஆத் ’ சமுதாயம் ஆவார்கள்!

(அல்குர்ஆன் : 7 : 69)

• அல்குர்ஆனில் கூறப்பட்டு உள்ள 25 நபி மார்க்களில் நபி ஹுத் (அலை) அவர்களும் ஒருவர் ஆவார்கள்!

• அல்குர்ஆனில் உள்ள 114 சூராவில் சூரத்துல் ஹுத் - 11 என்ற ஒரு சூராவும் உண்டு!

• நபி ஹுத் (அலை) அவர்களின் சமுதாயம் மற்ற சமுதாயத்தை விட ஆற்றல் மிக்கவர்களாக இருந்தார்கள் இதை பற்றி இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்!

💟 நபி ஹுத் (அலை) :

• நபி நூஹ் (அலை) அவர்களின் சகோதரன் தான் நபி ஹுத் (அலை) அவர்கள் ஆவார்கள்!

(அல்குர்ஆன் : 26 : 124)

நபி ஹுத் (அலை) அவர்களின் சமூகம்

மணற்குன்றுகள் நிறைந்த இரம் எனும் ஒரு நகரத்தில் வசித்து வந்தார்கள்!

• ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம் தான் தற்பொழுது உள்ள உபார் ஆகும்! தற்பொழுது யாரும் இல்லாத பாலைவனமாக தான் உள்ளது!

• இந்த பகுதி ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது!  இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது!

• ஆது கூட்டத்தினர் தங்களது வீடுகளை  உயர்ந்த தூண்களால் அழகாகவும் பெரியதாகவும் கட்டிக்கொண்டார்கள் அந்த அளவுக்கு உயரமாகவும் வலிமை மிக்கவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள்!

• இவர்களை போன்று ஒரு சமுதாயத்தை அல்லாஹ் எந்த நாட்டிலும் படைக்க வில்லை! ஏன் என்றால் ஆது சமுதாயத்திற்கு யாருக்கும் வழங்காத உடல் ஆற்றலும் மிகவும் உயரமானவர்களாகவும், மிகவும் வலுவானவர்களாகவும் இருந்தனர்!

(அல்குர்ஆன் : 89 : 6  

• ஆது மக்கள் மலையை குடைந்து பெரிய கட்டிடங்களையும், பெரிய மாளிகைகளையும் கட்டினார்கள்!  மலையை குடைந்து கட்டிய மாளிகைகள் இன்றும் காணப்படுகிறது!

• இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நல்ல முறையில் பசுமையான சூழ்நிலை கால்நடைகள் என அனைத்தும் பெற்று மகிழ்ச்சி ஆக வாழ்ந்து வந்தனர் இவர்களின் உடல் ஆற்றல் மற்றும் வலிமையினால் இவர்களை எதிர்க்க வேறு யாருக்கும் இந்த உலகில் ஆற்றல் இல்லை!

• காலம் செல்ல செல்ல அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்து ஆது மக்கள் சிலை வழிபாடுகளில் அதிகம் ஈடுபட்டு வந்தனர் அதனால் அல்லாஹ் இவர்களின் இருந்து நபி ஹுத் (அலை) அவர்களை தேர்வு செய்து மார்க்கத்தை பற்றி எடுத்து கூற அனுப்பினான்!

நபி ஹுத் (அலை) அவர்கள் அல்லாஹ்வை பற்றியும் அவன் அருட்கொடைகளை பற்றியும் பல காலம் எவ்வளவோ எடுத்து கூறினார்கள் :

(அல்குர்ஆன் : 26 : 123 & 139)

என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள்! இவ்வாறு செய்தால் அல்லாஹ் உங்களுக்கு வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்!  மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் ! இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள் என்று எச்சரித்து கூறினார்கள்!

(அல்குர்ஆன் : 11 : 52)

• நபி ஹுத் (அலை) அவர்கள் நீண்ட காலம் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தும் இவர்கள் அதை கேட்கவில்லை! காரணம் :

• அல்லாஹ் இவர்களுக்கு கொடுத்த உடல் வலிமை தான் இதனால் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது! தங்களை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை! என்று ஆணவத்திலும் பெருமையிலும் மூழ்கி இருந்தார்கள்!

(அல்குர்ஆன் : 41 : 15)

• இது மட்டும் அல்லாமல் நபி ஹுத் (அலை) அவர்களை எங்களை போன்று உள்ள ஒருவரின் சொல்லை நாங்கள் ஏன் கேட்கவேண்டும்! நீங்கள் அறியாமையில் உள்ளீர்கள்! பொய்யர் என்றும் ஏளனமாக பேசினார்கள்!

• நபி ஹுத் (அலை) அவர்கள் இதன் பின்பும் தொடர்ந்து மார்க்கத்தை எடுத்து கூறினார்கள்! ஆனால் ஆது மக்கள் நீங்கள் கூறுவதால் எங்களுடைய கடவுள்களை விட்டு விட வேண்டுமா? உங்கள் இறைவன் புறத்தில் இருந்து ஏதேனும் அத்தாச்சி அல்லது வேதனை கொண்டு வாருங்கள் என்று ஏளனமாக கூறினார்கள்!

(அல்குர்ஆன் : 11 : 52 & 57)

💟 ஆது சமூகம் அழிக்கப்படுதல் :

• நபி ஹுத் (அலை) அவர்கள் பல காலம் மார்க்கத்தை எடுத்து சொல்லியும் நபி ஹுத் (அலை) அவர்களின் சொல்லை இவர்கள் அலட்சியம் செய்தார்கள்! இறைவன் உடைய வேதனையை முடிந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள்!

• அல்லாஹ் வேதனையை அனுப்பும் முன்னே நபி ஹுத் (அலை) அவர்களையும் அவர்களை ஈமான் கொண்டவர்களை தனது அருளை கொண்டு காப்பற்றினான்!

(அல்குர்ஆன் : 11 : 58)

• அல்லாஹ் ஆது சமுதாயத்தினரை அழிக்க நாடினான் இதனால் அவர்கள் மீது வேதனையை அனுப்பினான்!

• ஆது சமுதாயம் மக்கள் மணற்குன்று பகுதிகளில் வாழ்ந்ததால் அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருந்தது அல்லாஹ் இவர்களை அழிக்க மேகங்களை அனுப்பினான்!

• கருமேகம் ஆது சமுதாயத்தினரை நோக்கி வருவதை பார்த்த இவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் நீண்ட நாட்களாக மழை இல்லை இப்போது மழை பொழிய போகிறது என்று!

• ஆனால் நபி ஹுத் (அலை) அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது மழை மேகம் இல்லை தண்டனை என்று!

(அல்குர்ஆன் : 46 : 24)

• விடியற்காலை நேரத்தில் அந்த மேக கூட்டம் இவர்களை அடைந்தது! அந்த மேகத்தில் இருந்து பெரும் இடி சப்தம் இவர்களை பிடித்து கொண்டது!

(அல்குர்ஆன் : 23 : 41)

• இது மட்டும் அல்லாமல் கடுமையான தபூர் எனும் மலட்டு காற்றை அல்லாஹ் இவர்கள் மீது சாட்டினான் அந்த காற்று பட்டவைகளை எல்லாம் மக்கி போனது போன்று ஆக்கி விடும்!

(அல்குர்ஆன் : 51 : 41 & 42 | புகாரி : 3205)

• அல்லாஹ் இன்னும் இவர்கள் மீது கடுமையான புயல் காற்றை 7 இரவுகள் 8 பகல் வரை சாட்டினான்! இதனால் இவர்களை அல்லாஹ் சிறிது சிறிதாக அழித்தான் எந்த அளவுக்கு என்றால் உலகில் எங்களை விட வலிமையானவர்கள் யாரும் இல்லை என்று கூறிய இவர்களின் நிலை வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் ஆக்கினான்!

• ஒருவர் கூட விட்டு வைக்காமல் அந்த காற்று அனைவரையும் அழித்தது!

(அல்குர்ஆன் : 54 : 19 & 21 | 69 : 6  

• ஆது சமுதாயம் அழிக்க பட்டாலும் அல்லாஹ் பின்னால் வர கூடியவர்களுக்கு படிப்பினைக்காக ஆவார்கள் வாழ்ந்த வீடுகளை அப்படியே இன்றும் விட்டு வைத்து உள்ளான்!

(அல்குர்ஆன் : 46 : 25)

• நம்மிடம் உள்ள பொருளாதாரம் செல்வம் ஆற்றலை கொண்டு நாம் தான் சிறந்தவர்கள் அனைத்தும் நம்மால் செய்ய முடியும் என்று ஒரு போதும் பெருமை கர்வம் கொள்ள கூடாது!

• ஆது சமுதாயத்தை போன்று ஒரு படைப்பை அல்லாஹ் படைக்க வில்லை அவ்வளவு வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்தும் அல்லாஹ்விற்கு மாறு செய்ததால் கர்வம் பெருமை ஆணவம் கொண்டதால் அல்லாஹ் அவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டான்!

• நாம் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விட பல மடங்கு ஆற்றல் மிக்கவன் என்பதை ஒரு போதும் மறந்து விட கூடாது! இதை மறந்து உலக வாழ்கையில் மூழ்கினால் அல்லாஹ்வின் தண்டனை எப்போது நமது மீது ஏற்படும் என்பது நமக்கு தெரியாது!

• நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்! பிறகு திரும்பி நடப்பார்கள்! தம் அறைக்கு உள்ளே போவார்கள்!  வெளியே வருவார்கள்!

• நிம்மதியற்று ஒருவித தவிப்புடன் நபி (ஸல்) அவர்கள் இருப்பார்கள்! மழை பொழிந்தால் தான் அவர்களின் நிலை மாறும் ஒவ்வொரு முறையும் இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இருப்பார்கள்!

• காரணம் ஆது சமுதாயம் இதே போன்று மழை மேகத்தினால் தான் அழிக்கப்பட்டனர்! ஒரு வேளை அல்லாஹ் அதே போன்று நமது மீது சாட்டி விடுவானோ என்று நமக்கு தெரியாது அதனால் தான் மழை மேகங்களை கண்டால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளுகிறேன் என்று கூறுவார்கள்!

(நூல் : புகாரி : 3206)

@அல்லாஹ் போதுமானவன் 💞

Search This Blog