கஅபாவுக்கு தங்கத் திரை ஏன்?
கஅபாவில் தொங்கும் திரை ஏன்? அதில் தங்க வேலைப்பாடுகள் ஏன்? கஅபாவை ஏன் சுற்றி வர வேண்டும்? கஅபா தான் உலகின் முதல் பள்ளியா? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர். இதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது?
ஹாஜா முஹ்யித்தீன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே கஅபா ஆலயம் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது பாழடைந்திருந்த கஅபாவை அவர்களின் காலத்து மக்கள் மறு நிர்மாணம் செய்தனர். அவ்வாறு மறு நிர்மானம் செய்யும் போது கஅபாவுக்கு திரை போடப்பட்டதால் அதுவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் நீடித்தது.
கஅபாவில் சில மாற்றங்களைச் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பிய போதும் அன்றைய மக்கள் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதால் அந்த மாறுதலைச் செய்யவில்லை.
பின்வரும் செய்தியில் இருந்து இதை நாம் அறியலாம்.
صحيح البخاري1584 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ» قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا؟ قَالَ: «فَعَلَ ذَلِكَ قَوْمُكِ، لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ، فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, இது கஅபாவில் சேர்ந்ததா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். பிறகு நான் எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை? எனக் கேட்டேன். அதற்கவர்கள் உனது சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான் என்று பதிலளித்தார்கள். நான் கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன் என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 1584
தீண்டாமையைக் கடைப்பிடிப்பதற்காக அவர்கள் வாசலைக் கூட உயரமாக ஆக்கி இருந்தனர். அந்தத் தீண்டாமையைத் தாட்சண்யமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறவே ஒழித்து விட்டனர். ஆனால் கட்டட அமைப்பை மாற்றுவதைப் பிறகு செய்யலாம் என்று கருதினார்கள். ஆனால் செய்யாமலே அவர்கள் மரணித்து விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த விருப்பத்தை பின்னால் வந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனாலும் நான்கு கலீபாக்கள் ஆட்சியில் அவர்களின் வேலைப் பளு காரண்மாக அதை நிறைவேற்றவில்லை.
இப்னுஸ் ஸுபைர் அவர்களின் ஆட்சியில் கஅபா இடிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. இதை வரவேற்க வேண்டிய அடுத்த ஆட்சியாளர்கள் அரசியல் காரணத்துக்காக மீண்டும் இடித்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர்.
صحيح البخاري1586 – حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «يَا عَائِشَةُ، لَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لَأَمَرْتُ بِالْبَيْتِ، فَهُدِمَ، فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ، وَأَلْزَقْتُهُ بِالأَرْضِ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ، بَابًا شَرْقِيًّا، وَبَابًا غَرْبِيًّا، فَبَلَغْتُ بِهِ أَسَاسَ إِبْرَاهِيمَ»، فَذَلِكَ الَّذِي حَمَلَ ابْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى هَدْمِهِ، قَالَ يَزِيدُ: وَشَهِدْتُ ابْنَ الزُّبَيْرِ حِينَ هَدَمَهُ، وَبَنَاهُ، وَأَدْخَلَ فِيهِ مِنَ الحِجْرِ، وَقَدْ رَأَيْتُ أَسَاسَ إِبْرَاهِيمَ حِجَارَةً، كَأَسْنِمَةِ الإِبِلِ، قَالَ جَرِيرٌ: فَقُلْتُ لَهُ: أَيْنَ مَوْضِعُهُ؟ قَالَ: أُرِيكَهُ الآنَ، فَدَخَلْتُ مَعَهُ الحِجْرَ، فَأَشَارَ إِلَى مَكَانٍ، فَقَالَ: هَا هُنَا، قَالَ جَرِيرٌ: فَحَزَرْتُ مِنَ الحِجْرِ سِتَّةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா! உனது கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; வெளியே விடப்பட்ட பகுதியையும் அதனுள் சேர்த்து இருப்பேன்; உயர்ந்திருக்கும் தளத்தைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக இரு வாசல்களை அமைத்திருப்பேன்; இதன் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்களை கஅபாவை இடிக்கத் தூண்டியது இந்தச் செய்திதான். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; மேலும் (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன் என யஸீத் பின் ரூமான் (ரஹ்) கூறுகிறார்கள். நூல் : புகாரி 1586
தங்க வேலைப்பாடுகள் செய்வதும், அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடுவதும் மன்னர்கள் பெருமை அடிப்பதற்காக உண்டாக்கப்பட்டதாகும்.
இஸ்லாத்தின் சரியான கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் போது இந்த வேண்டாத வழிமுறையால் பாதிப்பு ஏற்படும் என்பதை மன்னர்கள் உணர்வதாக இல்லை.
உலகில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் இறைவனை வழிபடுவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் என்பதால் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்ட முறையில் ஒரு வழிபாடு நடக்க வேண்டும் என்று இறைவன் கஅபாவைச் சுற்றி வரும் வணக்கத்தை ஏற்படுத்தியுள்ளான்.
வணக்க வழிபாடுகளுக்குக் காரணம் கூற முடியாது. இறைவன் எவ்வாறு வணங்கச் சொல்கிறானோ அவ்வாறு வணங்க வேண்டும் என்று தான் பதில் கூற முடியும். தொழுகையில் ஏன் நிற்க வேண்டும்? ஏன் குணிய வேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது.
ஒரு மனிதன் ஒன்றை விரும்புகிறான் என்றால் அதற்குரிய காரணத்தை நாம் கண்டு பிடிக்க முடியாது. ஒரு தலைவன் மஞ்சள் துண்டை விரும்பினால் எல்லோரும் அவருக்கு மஞ்சள் துண்டைத் தான் போடுவார்கள். அவர் ஏன் அதை விரும்புகிறார் என்று கேட்க முடியாது. மனிதனிடமே கேட்க முடியாது என்றால் தன்னை எவ்வாறு வணங்கினால் இறைவனுக்குப் பிடிக்குமோ அவ்வாறு வனங்கி விட்டுப் போக வேண்டும். அவ்வளவு தான்.
கஃபாவிற்குள் தொழலாமா?
அப்படி தொழுதால் கிப்லா எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்?
பதில்
கஃபாவிற்குள் தொழுவதை மார்க்கம் தடைசெய்யவில்லை. மக்கள் குறைவாக இருந்த காலத்தில் கஃபாவின் உட்பகுதி தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாகத் தான் இருந்தது. அதற்குள் மக்கள் தொழுது வந்தனர்.
கஃபாவிற்குள் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் சிதிலமடைந்த கஃபாவின் அஸ்திவாரத்திலிருந்து அதனை சுற்றி சுவர்களை எழுப்பி அதை ஒரு பள்ளியாக ஆக்கினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கஃபாவிற்குள் சென்று தொழுதுள்ளார்கள். அப்போது அவர்கள் கஃபாவின் வாசலுக்கு எதிரே இருக்கும் சுவரை நோக்கி நின்று தொழுதார்கள்.
صحيح البخاري4400 – حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، وَهُوَ مُرْدِفٌ أُسَامَةَ عَلَى القَصْوَاءِ، وَمَعَهُ بِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، حَتَّى أَنَاخَ عِنْدَ البَيْتِ، ثُمَّ قَالَ لِعُثْمَانَ: «ائْتِنَا بِالْمِفْتَاحِ». فَجَاءَهُ بِالْمِفْتَاحِ فَفَتَحَ لَهُ البَابَ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُسَامَةُ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ، ثُمَّ أَغْلَقُوا عَلَيْهِمُ البَابَ، فَمَكَثَ نَهَارًا طَوِيلًا، ثُمَّ خَرَجَ وَابْتَدَرَ النَّاسُ الدُّخُولَ، فَسَبَقْتُهُمْ فَوَجَدْتُ بِلاَلًا قَائِمًا مِنْ وَرَاءِ البَابِ، فَقُلْتُ لَهُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: صَلَّى بَيْنَ ذَيْنِكَ العَمُودَيْنِ المُقَدَّمَيْنِ، وَكَانَ البَيْتُ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ سَطْرَيْنِ، صَلَّى بَيْنَ العَمُودَيْنِ مِنَ السَّطْرِ المُقَدَّمِ، وَجَعَلَ بَابَ البَيْتِ خَلْفَ ظَهْرِهِ، وَاسْتَقْبَلَ بِوَجْهِهِ الَّذِي يَسْتَقْبِلُكَ حِينَ تَلِجُ البَيْتَ بَيْنَهُ وَبَيْنَ الجِدَارِ، قَالَ: «وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى وَعِنْدَ المَكَانِ الَّذِي صَلَّى فِيهِ مَرْمَرَةٌ حَمْرَاءُ»
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது "கஸ்வா' எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் "(கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு (உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?'' என்று கேட்டேன். அவர்கள், "அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்'' என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?'' என்று கேட்க மறந்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது. நூல் : புகாரி 4400
எனவே மார்க்க சட்ட அடிப்படையில் பார்த்தால் கஃபாவிற்குள் சென்று தொழுவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் இன்றைக்கு மக்கள் பெருங்கூட்டமாக கஃபாவிற்கு வருகை தருகிறார்கள். கஃபாவை அருகில் செல்வது கூட முடியாத காரியமாகிவிட்டது. இந்நிலையில் கஅபாவைத் திறந்துவிட்டால் ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு உள்ளே நுழைய முற்படுவார்கள். பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் அரசாங்கம் கஃபாவிற்கு உள்ளே யாரும் செல்ல முடியாதவாறு அதன் வாயிலை அடைத்துள்ளது.
எனவே கஃபாவிற்கு உள்ளே சென்று தொழும் வாய்ப்பு தற்போது அங்கு செல்லும் மக்களுக்கு இல்லை.
--onlinepj.in
share this... https://bit.ly/3I6eVUY