தவ்ஹீத் ஜமாஅத் video's: கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

கிப்லாவை நோக்கி கால் நீட்டலாமா?

கிப்லா

மேற்குத் திசை நோக்கி கால் நீட்டித் தூங்கலாமா?

சிலர் கிப்லாவை நோக்கி கால்நீட்டி தூங்கக் கூடாது என்கிறார்கள். எந்த்த் திசை நோக்கி தூங்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த்த் திசை நோக்கி தூங்கினார்கள் என்று ஹதீஸ் ஏதேனும் உள்ளதா?

நிஷாத்

பதில் :

மேற்குத் திசை நோக்கி காலை நீட்டக்கூடாது என்று முஸ்லிம்களில் அதிகமானோர் நம்புகின்றனர். கஅபா ஆலயம் மேற்குத் திசை நோக்கி அமைந்திருப்பதால் அதை நோக்கி கால் நீட்டுவது கஅபாவை அவமதிக்கும் செயல் என்று கருதுகின்றனர்.

கஅபாவை நோக்கி கால் நீட்டக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கி தொழுதால் அது அழகிய முறையாக இருக்கும் என்பதற்காகத் தான் கஅபாவை நோக்கித் தொழுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

கிப்லாவை நோக்கி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

தொழுகையில் கிப்லாவை நாம் முன்னோக்க வேண்டும்.

தொழுகும் போது கிப்லாவை நோக்கி எச்சில் துப்பக்கூடாது.

அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

صحيح البخاري408 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا سَعِيدٍ حَدَّثَاهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ المَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، فَقَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் (கிப்லாத் திசை) சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பிறகு, உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே (கிப்லாத் திசையில்) உமிழ வேண்டாம்; வலப் புறத்திலும் உமிழ வேண்டாம். இடப் புறமோ, பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். நூல் : புகாரி: 408

மலம் ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கக்கூடாது. பின்னோக்கக்கூடாது.

صحيح مسلم629 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ -صلى الله عليه وسلم- كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةَ. قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ.

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார் (போலும்) என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மைதான்); மல ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும், கெட்டிச் சாணத்தாலோ, எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களைத்  தடுத்தார்கள் என்று கூறினார்கள் நூல் : முஸ்லிம்

இந்த விதிமுறைகளை மட்டும் தான் கிப்லா விஷயத்தில் மார்க்கம் கூறுகின்றது. கிப்லாவை நோக்கி கால்களை நீட்டக்கூடாது என்று மார்க்கச் சட்டம் இருக்குமேயானால் அது குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். கிப்லவை நோக்கி கால் நீட்டக்கூடாது என்று எந்த ஆதாரமும் இல்லை.

தூங்கும் போது ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்க வேண்டும் என்றோ, ஒரு குறிப்பிட்ட திசையை முன்னோக்கக்கூடாது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எந்த்த் திசை வசதியாக இருக்கின்றதோ அந்த திசையை நோக்கி உறங்கிக் கொள்ளலாம்.

உறங்குபவர் உறங்கத் துவங்கும் போது வலப்புறமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் என்பதை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

247 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلْ اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ رواه البخاري

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத்தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும், அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும், உன்னை விட்டும் ஒதுங்கிவிடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் நபியை நான் நம்பினேன். என்று பிராத்தித்துக் கொள்! அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!  நூல் : புகாரி 247

626 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالْأُولَى مِنْ صَلَاةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும், ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்வதற்காக தம்மிடம் முஅத்தின் வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.  நூல் : புகாரி 626



கஅபாவை முன்னோக்குதல்

தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!  இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை  என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக  இல்லை.  அல்குர்ஆன் 2:144

...நீ தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை (கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி))  நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602


திசை தெரியவில்லையானால்...

சில நேரங்களில் கஅபா உள்ள திசை தெரியாமல் போகலாம் அப்போது ஏதாவது ஒரு திசையை நோக்கி நாம் தொழுது கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த ஒரு மனிதனையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.  அல்குர்ஆன் 2:286

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.  அல்குர்ஆன் 2:115


காபாவில் நான்கு தொழுகை தலங்கள் இருந்தனவா?

நான்கு மத்ஹப்கள் இல்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் வஹ்ஹாபிகளின் ஆட்சி சவூதியில் அமைவதற்கு முன்னர் கஅபாவில் நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனி தொழும் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும், வஹ்ஹாபிகள் தான் அதை மாற்றி விட்டார்கள் என்றும் நண்பர் கூறுகிறார். அது உண்மையா?

இம்ரான் கான்


பதில்:

அவர் சொல்வது உண்மைதான். சவூதி மன்னர்களின் ஆட்சி அமைவதற்கு முன்னால் ஷாஃபி முஸல்லா, ஹனஃபி முஸல்லா, மாலிகி முஸல்லா, ஹம்பலி முஸல்லா என நான்கு திசைகளிலும் நான்கு தொழும் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

ஒரே நேரத்தில் ஒரே தொழுகை நான்கு திசைகளில் நான்கு இமாம்களைப் பின்பற்றி நடக்கும். ஒரே நேரத்தில் ஒரே பள்ளியில் இருந்து நான்கு பாங்குகள் சொல்லப்பட்டன. இந்த அக்கிரமத்தை ஒழித்துக்கட்டிய சவூதி ஆட்சியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இஸ்லாம் ஒரே மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு பள்ளியில் ஒரு நேரத்தில் நான்கு தொழுகைகள் நான்கு தலைமையின் கீழ் நடந்து இஸ்லாத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. இஸ்லாமிய வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் குந்தகம் விளைவித்து வந்தது.

இந்த நான்கு முஸல்லாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்ததா? இல்லவே இல்லை.

சமாதியை வணங்கும் துருக்கி ஷைத்தான்களின் ஆட்சியில் தான் இந்த அலங்கோலம் அறங்கேற்றப்பட்டது. அதற்கு முன்னர் ஒரே முஸல்லா தான் இருந்த்து. எனவே சவூதி அரசாங்கம் புதிதாக ஒன்றையும் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் துருக்கி ஷைத்தான்கள் ஆட்சிக்கு முன்புவரை எந்த நடைமுறை இருந்ததோ அதைத் தான் சவூதி அரசங்கம் செய்தது.

பாராட்ட வேண்டிய அற்புதமான ஒரு நடவடிக்கையை எதிர்த்து கஅபாவில் கூட ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்று வாதிடுவோர் மிகவும் ஆபத்தானவர்கள்.

--onlinepj.in

share this .. https://bit.ly/3T6XBpb

Search This Blog