தவ்ஹீத் ஜமாஅத் video's: பரேல்விகளும் & வஹ்ததுல் உஜுதும்(உள்ளமை ஒன்று) தொடர் -2

பரேல்விகளும் & வஹ்ததுல் உஜுதும்(உள்ளமை ஒன்று) தொடர் -2

 பரேல்விகளும் & வஹ்ததுல் உஜுதும்(உள்ளமை ஒன்று)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(அசத்தியவாதிகளின் இருட்டடிப்புகள் தொடர் -2)

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

பரேல்விகளின் வரலாற்று இருட்டடிப்புகளில் இவர்கள் ஏன் அல்லாஹ்வும் , அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத விடயங்களை மார்க்கமாக மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

 சத்தியம் எது ?அசத்தியம் எது ?

என்று தெளிவாக தெரிந்த பின்பும் சத்தியைத்தை பின்பற்றுவதற்கு முன்வராமல் இறுமாப்புடன் அசத்தியத்தில், நிலைகுலையாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றக்கூடிய ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கு இயல்பாகத் தோன்றும் ஒன்று,

இதற்கு அடிப்படையான காரணம் அவர்கள் கொண்டுள்ள வழிகேடான கொள்கைகள்தான்,

தங்களது ஷேகுமார்களை, அறிஞர்களை அல்லாஹ்விற்கு நிகராக கருதுவதும் அவர்கள் சொல்வதுதான் இறுதியான மார்க்கத் தீர்ப்பு என்று விளங்குவதும் தான்,

பரேலவிகளிடம் மரணித்த இந்த ஸாலிஹீன்களிடம் (வலிமார்கள்)நேர்ச்சை செய்வது துஆ செய்வது, வஸீலா தேடுவது கூடாது என்று நாம் சொன்னால் அவர்கள் பதிலுக்கு

நாங்கள் இறைநேசர்களையோ

எங்களது சேகுநாயகங்களையோ

நாங்கள் வணங்கவில்லை அவர்களிடம் துஆ தான் கேட்கிறோம் என்கிறார்கள் கீழ்காணும் நபிமொழி இதை வழிகேடு என்று தெளிவுபடுத்துகிறது.

அத்தி பின் ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எனது கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவையை தொங்கவிட்டவனாக வந்தேன் நபியவர்கள் இந்த வசனத்தை சொல்வதை செவிமடுத்தேன்

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ 

(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்.  

(அல்குர்ஆன் : 9:31)

அல்லாஹ்வின் தூதர் அவர்களே பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அவர்கள் (கிருத்தவர்கள்)வணங்க கூடியவர்களாக இல்லை என்றேன்,

அதற்கு ஆம் ,என்றாலும் அல்லாஹ் விலக்கி வைத்ததை ஆகுமாக்கி,அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கியதால் அவர்கள் (பாதிரிகளையும் சந்நியாசிகளையும்) வணங்கியவர்களாக கருதப்படுவார்கள்.

நூல்- ஸூனனுல் குப்ரா பைஹகி,  எண்-30350 தரம்- ஸஹீஹ்.

وعن عدي بن حاتمٍ رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم، وفي عُنقي صليبٌ من ذهبٍ، قال: فسمعته يقول: ﴿ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ﴾ [التوبة: 31]"، قال: قلت: يا رسول الله، إنهم لم يكونوا يعبدونهم، قال: ((أجل، ولكن يحلُّون لهم ما حرم الله، فيستحلونه، ويحرِّمون عليهم ما أحَلَّ الله، فيحرِّمونه؛ فتلك عبادتهم لهم))؛رواه البيهقي في "السنن الكبرى" (30350)، وصححه الألباني.

தங்களை அஹ்லுல் பைத்  என்று சொல்ல சொல்லிக் கொள்ளும் ஷிஆக்களும் தங்களது 12 இமாம்களை முதன்மைப்படுத்தியதன் காரணமாக

இன்று அவர்கள் வழிகேட்டில் தாங்களும் பயணம் செய்து மற்றவர்களையும் வழிகேட்டின் பக்கம் இட்டுச் செல்கிறார்கள்,

ஆக இந்த தனி நபர் வழிபாடு மற்றும் ஷீஆக்களின் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஷீஆக்களை ஒரு  ஷீஆவாக இருந்தே

எதிர்த்த ஒரு அறிஞரை பற்றியும் கூடுதலான தகவல்களை காண கீழ்க்காணும் எனது யூடியூப் சேனலின் சுட்டியை சொடுக்கவும் 

https://youtu.be/p9tOvCfS4ec

இந்த ஷிஆக்களின் தத்துப் பிள்ளைகள் தான் இந்த வழிகெட்ட பரேல்விகள் இவர்கள் கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து தர்ஹாக்களையும் அரபுக் கல்லூரிகளையும் ,மதரசாகளையும் உலமாக்களையும் வழிகேடான கொள்கைகளின் பக்கம் பகிரங்கமாக அழைக்கத் தொடங்கி விட்டனர், அவர்களின் பகல் கனவு பலிக்காது இன் ஷா அல்லாஹ்.

எனவே சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விளக்குவதிலும் இவர்களின் பொய்யான போலி சுன்னத் ஜமாஅத் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தி விழிப்புணர்வுக்காக எனது இந்த பதிவுகளை பதிந்து வருகிறேன்,

الله هو المستعان و عليه التكلان

மரண இறுதிவரை உண்மையான கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்து மக்களை அதன் பக்கம் அழைத்து இறை பொருத்தத்தோடு அல்லாஹ்வை சந்திப்பதற்கு நம் அனைவருக்கும் அவன் தௌஃபீக் செய்திடுவானாக.

இந்த பரேல்விகளின் வழிகேடான ஒரு கொள்கை தான்

 “ வஹ்தத்துல் வுஜூத் 

(உள்ளமை ஒன்று ) ” 

வழிகெட்ட தத்துவம் 

(1165 -1240 பிறப்பு -இறப்பு)

இப்னு அரபி என அழைக்கப்படும் அபூ அப்தில்லா முஹம்மதி ப்னி அலி இப்னி முஹம்மதிப்னி அரபி 

அல்-ஹாத்திமி அத்தாயிஈ ஹஃபரஹுல்லாஹ் (غفره الله ) அராபிய சூபி இறைஞானியும், மெய்யியலாளரும் ஆவார். 

சூபித்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இவர் 

"பெரும் அறிஞர்" எனவும் உண்மையான ஞானி எனவும் போற்றப்பட்டவர் . 

'வஹ்தத்துல் வுஜூத்' 

(உள்ளமை ஒன்று) என்னும் அத்வைத ஞானம் பேசியவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக இவர் இருந்தார். 

காழி அபூபக்கர் இப்னுல் அரபி அல்இஸ்பீலி அல்மாலிகி ரஹிமஹுல்லாஹ் வேறு ஒரு அறிஞர் இவர்கள் பிரபலமான தப்சீர் புத்தகமான அஹ்காமுல் குர்ஆனை (احكام القرآن )

எழுதியவர்கள் , அல்அவாஸிமு மினல் கவாஸிமி (العواصم من القواصم )

என்ற இஸ்லாமிய வரலாற்று துறையில் சிறந்த புத்தகத்தை வழங்கினார்கள்.

இவர் தப்ஸீர் ஹதீஸ் ,ஃபிக்ஹு கலையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்.

சிலர் அபூபக்கர் இப்னுல் அரபியையும்,முஹையுத்தீன் இப்னு அரபியையும் தங்களது ஆய்வுகளில் குழப்பிக் கொள்கிறார்கள்.

நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போவது ஸுஃபி இப்னு அரபியை பற்றித்தான்,

இவர் 400 க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 

'அல் புதுஹாத்துல் மக்கியா',

الفتوحات المكية

فصوص الحكم புஸுசுல் ஹிகம்', 'மபாதிஹுல் கைப்' مبادي الغيب', 'முஹாளறதுல் அப்றார்

'محاضرة الأبرار ومسامرة الأخيار

 ஆகியவை மிகப் பிரபலமானவையாகும்.

லாஇலாஹ இல்லல்லாஹ் (-لااله الا الله ) என்ற ஏகத்துவத்திற்கு எதிராக 

லா மவ்ஜூத இல்லல்லாஹ் (لا موجود الا الله ) என்ற அத்வைத கொள்கையை இஸ்லாமிய உலகத்திற்கு ஏகத்துவ சாயலில் கிரேக்க தத்துவங்களை அதாவது "யாவும் இறைவனே ,இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் " என்ற முற்றுலும் தவ்ஹீதுக்கு (ஏகத்துவத்திற்கு ) முரணான அபாயகரமான கொள்கையை பரப்பியவர்.

தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தக் கொள்கையை கொண்டவர்கள் மிக தைரியமாக பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தங்களது வழிகேடான கொள்கைகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வதை நாம் கண்டு வருகிறோம், தயவுகூர்ந்து இவர்களை இனம் கண்டு இவர்களுடைய நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளோ அல்லது எந்த உதவிகளையும் நீங்கள் செய்யாதீர்கள் ,அசத்தியம் மிகைக்கும் பொழுது சத்தியம் தனது இரும்புக் கரத்தால் அதை அடக்கி ஒழிக்கும்

என்பதற்கு சான்றாக....

சமீபமாக திருச்சி ஜமாஅத்துல் உலமா சார்பாக  இந்த அத்வேத கொள்கை உடைய பரேல்விகளை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், சேலம் மஸாஹிருல் உலூம், லால்பேட்டை மன்பவுல் அன்வார் திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்  வழிகேடர்களாக மார்க்கத் தீர்ப்பை 

வழங்கி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள், புத்தகம் தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

வடநாட்டில் இவர்கள் செய்த அழிச்சாட்டியத்தின் காரணமாக

தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி பீடம் மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்து இவர்களின் கொட்டங்களை அடக்கியது,

இன்றும் அங்கு மேல்படிப்பு படிப்பதற்காக செல்லும் ஆலிம்கள் தங்களது பாடத்திட்டத்தில் இந்த வழிகெட்ட பரேல்விகளை பற்றிய ஒரு ஆய்வு வகுப்பாக படிக்கிறார்கள், ஒர்க்ஷாப்புகள்,செமினார்களும் நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதனால்தான் தேவ்பந்தி,நத்வி, காஷிஃபி, தாவூதி, மன்பஃஈ,யூசுஃபி, ஹசனி,இர்ஷாதி ,அன்வாரி போன்ற பட்டங்கள் பெற்று களமிறங்கும் ஆலிம் உலமாக்களை கண்டு  இந்த பரேலவிய குள்ளநரிகள் வஹாபிகள் என்று அவ்வப்பொழுது சமூகவலைதளங்களில் ஊளையிட்டு கொண்டிருக்கின்றது, அதை கண்ட சில நண்பர்கள் பயந்து டென்ஷனாகி உஸ்தாத் நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களின் கட்டுரைகளை உங்களை அவர்கள் வசை பாடுகிறார்கள் எங்களால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை முகம் சுளிக்கிறது என்று கூறுகிறார்கள்.

اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ 

“அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” 

(அல்குர்ஆன் : 41:14)

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் 

لا معبود بحق  الا الله 

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று தான் நாம் கூறுகிறோம்.

 من قال بالحلول فدينه معلول، وما قال بالاتحاد إلا أهل الإلحاد    

—محيي الدين ابن عربي

"இறைவன் மனிதனின் மீது ஊடுருவுவான் என்று கூறுபவரின் 

மார்க்கம் சந்தேகத்துக்கு உரியது

உள்ளமையை வாதிடுபவன் நாத்திகனாக தான் இருக்க முடியும்", என்று முஹ்யுத்தீன் இப்னு அரபி கூறியதாகவும் சில புத்தகங்களில் ஆதாரங்கள் இல்லாமல் பதியப்பட்டிருக்கிறது இதை வைத்துதான் எங்கள் இமாம் இப்னு அரபி இவ்வாறு கூறவில்லை என்று சொல்கிறார்கள்.

இவரின் கொள்கை உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விட்டும் சற்று  சந்தேகத்துக்குரியதாகவே காட்சியளிக்கிறது.

 فصوص الحكم', புஸுசுல் ஹிகம்'

என்ற இவரின் புத்தகம் இவருடைய காலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி அந்த காலத்தில் வாழ்ந்த உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் இவரை கடுமையாக எதிர்த்தனர்.

இவரின் சிந்தனையகளால் ஈர்க்கப்பட்ட இப்னு அல் பாரில் ,அல் தலசமானி போன்ற அறிஞயர்களும் இந்த வழிகேட்டின் பக்கம் மக்களை அழைக்க தொடங்கினர்

நாளை மறுமையில் வெற்றி பெறும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின் அடிப்படையில்

 "ஏக இறைவனான அல்லாஹ் ஏழு வானத்திற்கு மேல் தனது அர்ஷில் இருக்கிறான் என்பதும், அவனின் சக்தியும் வல்லமையும்  முழு அகில உலகத்தையும் வியாபித்து இருக்கிறது என்பதுதான்  .

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.

(அல்குர்ஆன் : 20:5)

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ 

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். 

(அல்குர்ஆன் : 7:54)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான். இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாரியா என்ற அடிமைப் பெண்ணைப் பார்த்து “அல்லாஹ் எங்கே இருக்கிறான்” என்று கேட்ட போது அந்தப் பெண் ” அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்” என்று கூறினார். உடனே நபியவர்கள் எஜமானனைப் பார்த்து “இவரை விடுதலை செய்யுங்கள். இவர் ஒரு முஃமினாவார்” (முஸ்லிம்)

என்று கூறினார்கள்.

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக்(ரஹ்) தாரமி.

இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் எனது ரப்பு வானத்தில் இருக்கிறானா ? அல்லது பூமியில் இருக்கிறானா ? எனக்கு தெரியாது என்று சொன்னால் 

அவர் காஃபிராகி விடுவார்,

அதே போல் அல்லாஹ் அர்ஷில்தான் இருக்கிறான் ஆனால் அர்ஷு வானத்தில் இருக்கிறதா பூமியில் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது என்று சொன்னாலும் அவரும் காஃபிராகி விட்டார்.

நூல்கள்-

[ ﺍﻟﻔﻘﻪ ﺍﻷﺑﺴﻂ ﺹ49 ، ﻣﺠﻤﻮﻉ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﻻﺑﻦ ﺗﻴﻤﻴﺔ ﺝ5 ﺹ 48، ﺍﺟﺘﻤﺎﻉ ﺍﻟﺠﻴﻮﺵ

ﺍﻹﺳﻼﻣﻴﺔ ﻻﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺹ 139 ، ﺍﻟﻌﻠﻮ ﻟﻠﺬﻫﺒﻲ ﺹ 101 ، 102، ﺍﻟﻌﻠﻮ ﻻﺑﻦ ﻗﺪﺍﻣﺔ

ﺹ 116 ، ﺷﺮﺡ ﺍﻟﻄﺤﺎﻭﻳﺔ ﻻﺑﻦ ﺃﺑﻲ ﺍﻟﻌﺰ ﺹ 3

ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺃﺑﻮ ﺣﻨﻴﻔﺔ : ﻣﻦ ﻗﺎﻝ ﻻ ﺃﻋﺮﻑ ﺭﺑﻲ ﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ ﻓﻘﺪ

ﻛﻔﺮ، ﻭﻛﺬﺍ ﻣﻦ ﻗﺎﻝ ﺇﻧﻪ ﻋﻠﻰ ﺍﻟﻌﺮﺵ، ﻭﻻ ﺃﺩﺭﻱ ﺍﻟﻌﺮﺵ ﺃﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ .

வல்ல இறைவன் நமக்கு சரியான இஸ்லாமிய கொள்கையை பின்பற்றுவதற்கு தவ்பீக் செயவானாக .

( இன் ஷா அல்லாஹ் சத்திய போர்வாள் தொடர்ந்து சுழலும்)..

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

Search This Blog