தவ்ஹீத் ஜமாஅத் video's: குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்
Showing posts with label குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள். Show all posts
Showing posts with label குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள். Show all posts

நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?

 நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?

குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் குர்ஆனைப் போன்று ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் பாதுகாக்கப்படவில்லை. எந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம்? எந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இன்றைக்கும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா?

 ஏர் கலப்பை பழிப்பிற்கு உரியதா?


மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்.

صحيح البخاري

2321 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ: وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الذُّلَّ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَاسْمُ أَبِي أُمَامَةَ صُدَيُّ بْنُ عَجْلاَنَ»


முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும், மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2321


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏர் கலப்பை இருக்கும் வீட்டுக்கு இழிவு ஏற்படும் என்று சொன்னதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

 குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

திருக்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று அறிஞர் இப்னுல் கையூம் சொன்னதை ரமலான் உரையில் பீஜே எடுத்துக் காட்டினார்.

இந்த விஷயத்தில் பீஜே இருட்டடிப்புச் செய்து விட்டார் என்று சலபுகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான்:

மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

 மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.

சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும் மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா?

இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது.

வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும்.

ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது தங்கச் செயின் தான். ஆனால் நம்பிக்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.


  நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்.



    3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த


அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

    புகாரி 3268

நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஒரு பகுதி விளக்கம்

 நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஒரு பகுதி விளக்கம்

இந்த ஹதீசை மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரங்களில் மிகப் பிரதான ஒன்று அதில் நபிகளாருக்கு மன நோய் உள்ளதாக இருப்பதாகும்.

இந்த ஹதீசை மறுக்கத் தேவையில்லை என்று சொல்பவர்கள் இதற்குச் சொல்லும் பதில் இந்ந ஹதீசில் நபிகளாருக்கு மன நோய் என்று வரவில்லை
என்பதாகும்.

இதில் இருந்து இருதரப்பாரும் ஒத்துக் கொள்ளும் ஓர் அம்சம் நபிகளாருக்கு மன நோய் அல்லது பைத்தியம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது இருக்கவும் கூடாது என்பதே.

ஏன் என்றால் நபிக்கு பைத்தியத்தின் ஓர் அம்சம் கூட இருக்காது என்று குர்ஆன் திட்டவட்டமாக சொல்வதால் ஆகும்.

நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த ச.வூதி அறிஞர்

 

    நம்பகமானவர்கள் அறிவித்த ஹதீஸை மறுக்கும் மூத்த ச.வூதி அறிஞர்

அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும், அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாகவும், குர்ஆன் கூறும் அறிவுக்கு மாற்றமாகவும் இருந்தால் அதை ஹதீஸாக ஏற்க முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

 இது தான் சரியான கொள்கை. ஆனாலும் இதை சுன்னத் ஜமாஅத் உலமாக்கள் ஏற்றுக் கொள்ளாமல் கடந்து விடுகிறார்கள். ஆனால் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் எனக் கூறும் ஸலபிகள் என்போர் இதற்கு ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்ற பட்டம் சூட்டி நமக்கு வழிகேடர், காஃபிர் என்றெல்லாம் முத்திரை குத்தி வருகிறார்கள்.


 ஆனால் ஸலபுகளின் முக்கிய இமாமாகத் திகழும் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமின் அவர்கள் கருத்து தவறாக உள்ளதால் ஹதீஸை மறுத்துள்ளார்.

 இப்னு ச.வூத் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சவூதியில் உள்ள மூத்த ஸலபு உலமாக்களில் முன்னனியில் உள்ளவர் ஆவார்.

 தஜ்ஜால் குறித்து பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் முஸ்லிம் நூலில் தஜ்ஜால் குறித்து கூறுகின்ற நீண்ட ஹதீஸை அதன் கருத்துக்கள் சரியில்லை என்ற காரணத்துக்காக மறுத்துள்ளார்.

 அறிவிப்பாளர்கள் தொடர் சரியாக இருந்தாலும் இது நபியின் பேச்சு போல் இல்லை என்பது போன்ற காரனங்களைக் கூறி அவர் அந்த ஹதீஸை மறுத்துள்ளார்.

 இது குறித்து துருக்கியில் ஆய்வு மாணவராகக் கல்வி கற்கும் இலங்கையைச் சேர்ந்த அஹ்மத் ஜம்ஸாத் அவர்கள் ஒரு ஆக்கத்தை அனுப்பியுள்ளார். அதை இங்கே பதிவு செய்கிறோம்.

தஜ்ஜால் குறித்த இந்த ஹதீஸ் குறித்து நமது நிலைபாடும் இதுதான்.

நீங்கள் ஸலபிக் கொள்கையில் உள்ளவரா? அப்படியென்றால் இது உங்களுக்குத் தான்!

பீஜே என்பவர் ஹதீஸ் மறுப்பாளரா?


  ஹதீஸ் மறுப்பாளர் என்ற குற்றச்சாட்டு குறித்து அலசுவோம்!
இதுவே நீண்ட காலமாக நிலவும் பிரதான சர்ச்சையாகும்! ஸலபி அறிஞர்கள் ஸஹீஹ் என்று கருதும் பல ஹதீஸ்களை பீஜே என்பவர் மறுப்பதால் ஹதீஸ் மறுப்பாளர் என்று கூறப்படுகிறது!
அப்படியென்றால் நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்! ஒரு அறிஞரின் பார்வையில் ஸஹீஹ் என்று கருதப்படும் ஒரு ஹதீஸை இன்னொரு அறிஞர் ழயீஃப் என்று கூறி மறுத்தால் மறுப்பவர் ஹதீஸ் மறுப்பாளரா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்!

பல்லிக்குப் பகுத்தறிவு? பைத்தியம் முத்திப்போன ஜாக்

 பல்லிக்குப் பகுத்தறிவு?
பைத்தியம் முத்திப்போன ஜாக்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், "அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது'' என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி),
நூல்: புகாரி 3359
புகாரியில் இடம் பெறும் பல்லி தொடர்பான இந்த ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
அதை விரிவாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்து தக்க ஆதாரங்களுடன் முன்னரே, ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் எழுதியிருந்தோம்.

பல வருடங்களாக இது தொடர்பான வாதங்களுக்கு யாராலும் பதிலளிக்கப்படாத நிலையில் கோமா நிலையில் இருந்த, தற்போதும் அவ்வாறே இருக்கின்ற ஜாக் அண்மையில் இதற்குப் பதில் சொல்கிறேன் என வெகுண்டெழுந்து புறப்பட்டு வந்தது. ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பான நம்முடைய வாதங்களை முன்வைத்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டியிருந்தது.
அந்தோ பரிதாபம்! நாம் எழுப்பியிருந்த வலுவான வாதங்களுக்கு ஜாக் அளித்திருந்த பதில் தனக்கு கோமா நிலை உண்டென்பதை சந்தேகமறப் பறைசாற்றும் வகையில் பல உளறல்களையும், முரண்பாடுகளையும், கிறுக்குத்தனமான வாதங்களையும் உள்ளடக்கியிருந்தது.

இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?

  இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?

இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை எடுத்துக் கொள்ளலாம்.

3359 حدثنا عبيد الله بن موسى، أو ابن سلام عنه، أخبرنا ابن جريج، عن عبد الحميد بن جبير، عن سعيد بن المسيب، عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم، أمر بقتل الوزغ، وقال: كان ينفخ على إبراهيم عليه السلام

உம்மு ஷுரைக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும் அவர்கள், அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 335
9

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

 பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

ச.வூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹிஜாபைக் களைந்து விடும். கார் ஓட்டும் போது முகத்தைக் காட்ட வேண்டும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.
பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.
அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.
பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.
சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும்.
சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.
விலைவாசி உயர்வு, கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.
ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.
பெண்களின் குற்றங்கள் அதிகரிப்பதால் அவர்களைக் கண்காணிக்க பெண் காவல் துறை உருவாக்க வேண்டும். பெண் காவலர்களும் முகத்தைக் காட்டியாக வேண்டும்.
பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.
கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு எதிரானது.
இவை அனைத்தும் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கினால் ஏற்படும் குழப்பங்கள் என்று சவூதி மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாகும்.

இதற்கு இவர்கள் தரும் தீர்வு, வெளிநாடுகளிலிருந்து ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.

அவ்வாறு அமர்த்துகின்ற போது இதை விட அதிகமான பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அந்த டிரைவர்கள், பெண்களைத் தனியாகவே அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சதாவும் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது. குடும்பத்தினர் அனைவருடனும் டிரைவர் சர்வ சாதாரணமாகக் கலக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு என்ன?

பால்குடிச் சட்டம் ஜாக்கின் பித்தலாட்டம்


சஹ்லா என்ற நபித்தோழியர் சாலிம் என்பவரை சிறு குழந்தையிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தார். சாலிம் தாடி முளைத்த பெரிய இளைஞராக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் வளர்ப்புக் குழந்தைகள், பெற்றெடுத்த குழந்தைகளின் அந்தஸ்தை அடைய முடியாது. வளர்ப்புக் குழந்தைகளானாலும் அவர்கள் பெரியவராகி விட்டால் அவர்களும் அந்நிய ஆண்களாவார்கள் என்ற சட்டத்தை அல்லாஹ் விதித்தான். இதற்குப் பின் சாலிம் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதால் தனது கணவர் அபூஹுதைஃபா கோபம் கொள்வதாக சஹ்லா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. அவர் உனக்கு


மகனாகி விடுவார். உனது கணவர் அபூஹுதைபாவும் கோபம் கொள்ள மாட்டார்’ என்று நபி (ஸல்) கூறியதாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்கும் போதே சாதாரண அறிவுள்ளவர்கள் இப்படி ஒரு சம்பவம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்திருக்க முடியாது. இது தவறான தகவல் என்பதை அறிந்து கொள்வார்கள்.

பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்

 பத்து வயது கைக்குழந்தை! இஸ்மயீல் சலஃபியின் உளறல்

ஸாலிம் என்ற இளைஞருக்குப் பாலூட்டுமாறு ஸஹ்லா என்ற பெண்மணிக்கு நபிகள் கட்டளையிட்டதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது. அது குர்ஆனுக்கு முரணானது என்று கூறி வருகிறீர்கள். பாலூட்டுவது என்றால் ஸஹ்லாவுக்கு அந்த நேரத்தில் கைக்குழந்தை இருக்க வேண்டும். கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். ஆனால் ஸாலிமுக்கு பாலூட்டச் சொன்ன நேரத்தில் ஸஹ்லாவுக்கு கைக்குழந்தை இருந்ததற்கு ஆதாரம் உண்டு என்று இஸ்மாயீல் சலபி என்பவர் கட்டுரை எழுதியுள்ளாரே? இதன் உண்மை நிலை என்ன?இஹ்ஸாஸ், இலங்கை

அவருக்கு கைக்குழந்தை இருந்ததா என்பது அடிப்படையான கேள்வி அல்ல. அந்த நேரத்தில் அவருக்கு கைக்குழந்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். இது தான் அடிப்படையான கேள்வியாகும்.

உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் இந்த ஹதீஸ் குறித்து நாம் எழுப்பிய கேள்விகளையும், வாதங்களையும் பார்க்கவும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் இதுவரை பதில் சொல்லி இருக்கிறார்களா என்று நீங்களே அறிந்து கொள்வீர்கள்.

ஹதீத் மறுப்பா? அல் குரானை நேசிக்கும் கொள்கையா?

 ஹதீத் மறுப்பா? அல் குரானை நேசிக்கும் கொள்கையா?

“ஹதீஃத் மறுப்பாளர்கள்” இந்த பதம் மிகவும் வஞ்சத்துடன் பரப்பப்படும் ஒரு குரூர யுக்தி.
ஒருவர், ஒரு செய்தியை அல் குரானின் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த செய்தியை நான் ஏற்க மறுக்கிறேன் என்பது அல் குரானை வலுப்படுத்தும் கொள்கையா? இல்லை ஹதீஃதை மறுக்கும் கொள்கையா?! உண்மையிலேயே அல் குரான் மீது நேசமில்லாதவர்கள் தான், ஒரு செய்தி அல் குரானுக்கு வேறுபட்டு நின்றாலும் அதை நேசிப்பார்கள்.
அவர்கள் அல் குரான் வெறுப்புக் கொள்கையில் இருக்கிறார்கள் போலும்! ஹதீஃத்களில் கையாடல்கள் உண்டு என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்ட விடயம். அல் குரானில் எந்தக் கையாடல்களும் இல்லை என்பதை இசுலாமியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட விடயம். அல் குரானுக்கு முரன்பட்டால் அது ஒரு பொழுதும் ஹதீஃத் ஆகாது. ஏனெனில், ஒரு உண்மையான ஹதீஃத் அல்லாஹ்வின் பேச்சிற்கு முரன்படாது. அப்படி முரன்பட்டால் அது ஹதீஃதே கிடையாது. அதை ஏற்க வேண்டிய அவசியமும் கிடையாது.

தேளிடம் கடி வாங்க தயாரா

 அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

صحيح البخاري 5445 – حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ اليَوْمِ سُمٌّ وَلاَ سِحْرٌ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வா  (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5445

صحيح البخاري 5768 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمٌ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ سُمٌّ، وَلَا سِحْرٌ ذَلِكَ اليَوْمَ إِلَى اللَّيْلِ» وَقَالَ غَيْرُهُ: «سَبْعَ تَمَرَاتٍ»
மற்றொரு அறிவிப்பில் அன்று இரவு வரை இடரளிக்காது என்று கூறப்பட்டுள்ளது.
பார்க்க நூல்: புகாரி 5768

மேற்கண்ட செய்தி திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளில் ஒன்றாகும்.
இது எப்படி திருக்குர்ஆனுக்கு முரண்படுகிறது? என்று பார்ப்போம்.

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

நூலின் பெயர் : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?


بسم الله الرحمن الرحيم

 குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும்.

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து மக்களையும் காப்பாற்றுவதற்காக விவாதங்களை நடத்தினோம். இதன் விளைவாக ஹதீஸின் அவசியத்தை மக்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?


 விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி
தண்டனையா?

ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர்.

ஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

அந்தச் செய்தியின் கருத்து சரியானதா? குர்ஆனுக்கும், கண் முன்னே தெரியும் உண்மைக்கும் முரணில்லாமல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்பவர்கள் இன்னொரு வகையினராவர்.

வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா


வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?


இன்னொரு செய்தியைப் பாருங்கள்!

3407 حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن ابن طاوس، عن أبيه، عن أبي هريرة رضي الله عنه، قال: أرسل ملك الموت إلى موسى عليهما السلام، فلما جاءه صكه، فرجع إلى ربه، فقال: أرسلتني إلى عبد لا يريد الموت، قال: ارجع إليه فقل له يضع يده على متن ثور، فله بما غطت يده بكل شعرة سنة، قال: أي رب، ثم ماذا؟ قال: ثم الموت، قال: فالآن، قال: فسأل الله أن يدنيه من الأرض المقدسة رمية بحجر، قال أبو هريرة: فقال رسول الله صلى الله عليه وسلم: لو كنت ثم لأريتكم قبره، إلى جانب الطريق تحت الكثيب الأحمر قال وأخبرنا معمر، عن همام، حدثنا أبو هريرة، عن النبي صلى الله عليه وسلم نحوه

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர் மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

ஆதாரப்பூர்வமானஹதீஸ்களின் இலக்கணம் என்ன?

 ஆதாரப்பூர்வமானஹதீஸ்களின் இலக்கணம் என்ன?

தொடர் 1

(இஸ்மாயில் சலபியின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவரது ஆய்வை மட்டும் மறு ஆய்வு செய்யும் தொடர்)

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் இஸ்மாயில் சலபி அவர்கள் தனது பத்திரிகையில் எட்டு தொடர் கட்டுரை எழுதி நிறைவு செய்திருக்கிறார்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும் ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அவர் எடுத்து வைக்கவில்லை. குர்ஆனுக்கு முரண்பட்டாலும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று ஹதீஸ் கலையில் விதி இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டவில்லை.

புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை

 புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்
அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை

ஆரம்பத்தில் ஏகத்துவக் கருத்து (எம். ஷம்சுல்லுஹா) என்னைப் போன்றவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டபோது பற்றிக் கொண்ட பயமும், தொற்றிக் கொண்ட கேள்வியும், “இதற்கு முன்பு இதே போன்று ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அறிஞர்கள் நமக்குத் தென்படவில்லையே! அப்படி ஏற்றுக் கொண்ட யாரும் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் நாமும் ஏற்றுக் கொள்வோம்’ என்பது தான்.

Search This Blog